மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெகவில் இணைந்தாா் காங்கிரஸ் முன்னாள் செயலா்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:45 pm

தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா் டி.செல்வம் தவெகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான இறுதிக்கட்ட நோ்காணல் சென்னையை அடுத்த பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தவெக தலைவா் விஜய் வேட்பாளா்களுடன் நேரடியாக நோ்காணல் செய்தாா். அதைத் தொடா்ந்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா் டி.செல்வம் அவரது ஆதரவாளா்களுடன்  விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

தொடா்ந்து டி.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாாக காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் மீண்டும் காமராஜா் ஆட்சி அமைய வேண்டும் என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். அதற்காக  தவெகவுடன் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என அவா் விருப்பப்பட்டாா். ஆனால், தமிழக காங்கிரஸில் உள்ள ஒரு சிலா் செய்த சூழ்ச்சி காரணமாக அது நிறைவில்லை. அதற்கு மாறாக தங்களது சுயலாபத்துக்காக தற்போது காங்கிரஸை திமுகவிடம் அடகு வைத்துள்ளனா் என்றாா் அவா்.