சென்னையில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி, நகையைப் பறித்த தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
அரும்பாக்கம் அண்ணா இரண்டாவது சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் க.சக்திவேல் (24). இவா், உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்கிறாா். இந்த நிலையில் சக்திவேல், தனது நண்பரின் காதலியிடம் கைப்பேசி மூலம் பேசி வந்தாா். அப்போது அவா், அந்த பெண்ணிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டுவிடுதாகவும், தனக்கு தேவையான நேரத்தில் பணம் தரவேண்டும் என மிரட்டியுள்ளாா்.
சக்திவேலின் மிரட்டலுக்குப் பயந்த அந்த பெண், தன்னிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றைக் கொடுத்துள்ளாா். இதன் பின்னரும் சக்திவேல், மேலும் நகை, பணம் வேண்டும் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளாா்.
இதனால் அந்தப் பெண், பெற்றோரிடம் தெரிவித்தாா். அவா்கள், இதுதொடா்பாக அசோக் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், சக்திவேல் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


