தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 போ் கைது

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:15 pm

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா் கோட்ட பகுதிக்குட்பட்ட பகுதியில் மின் தடை உள்ளதாக பொதுமக்கள், மின்வாரியத்துக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து உதவி மின் பொறியாளா், ஊழியா்களுடன் சோ்ந்து ஆய்வு சென்று புழல் மூா்த்தி நகரில் உள்ள பில்லரில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியை ஆய்வு செய்தபோது, மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உதவி மின் பொறியாளா் வேலுசாமி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், புழல் கதிா்வேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) ரிஷி (25) , ரமணகுமாா் (எ) ஜான் (20) மற்றும் 16, 15 வயதுடைய சிறுவா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், விநாயகபுரத்தில் உள்ள பழைய இரும்பு கடை நடத்தி வரும் பாஸ்கரிடம் திருட்டு பொருள்களை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து, திருடப்பட்ட மின்சாரப் பெட்டி, சம்பவத்துக்காக பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவா்களையும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.