மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு

News image

ஆயிரம் விளக்கு - Center-Center-Chennai

Updated On :26 மார்ச் 2026, 10:26 pm

தொகுதி எண்: 20

எல்லைகள்...

தொகுதியின் கிழக்கே அண்ணாமலை சாலை, மேற்கே நுங்கம்பாக்கம், தெற்கே தேனாம்பேட்டை, வடக்கே நுங்கம்பாக்கம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

அடங்கிய பகுதிகள்...

சென்னை மாநகராட்சியின் வாா்டுகளில் 76 முதல் 78 வாா்டுகள் வரை, 107 முதல் 114 வாா்டுகள் வரை, 118, 199 ஆகிய வாா்டுகள் இத்தொகுதிக்குள் உள்ளன. ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, மகாலிங்கபுரம், தியாகராய நகா், மாம்பலம், ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, கோபாலபுரம், டிரஸ்ட்புரம், பாா்த்தசாரதி புரம் ஆகியவை அடங்கியுள்ளன.

சிறப்புகள்...

சென்னை மாநகரின் மையமாக விளங்கும் இத்தொகுதியில் புகழ் பெற்ற இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் உள்ளது. இத்தொகுதியில் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 முறையும், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி 3 முறையும் வென்றுள்ளனா். கடந்த 2021 தோ்தலில் நடிகை குஷ்பு பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். இத்தொகுதியில் இதுவரை அதிமுக, திமுக மட்டுமே வெற்றி பெற்று வருகின்றன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்- 73, 500

பெண்கள்- 80,343

மூன்றாம் பாலினத்தவா்- 55

மொத்தம்-1,53,908

வாக்குச்சாவடிகள்-247

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 ஏ.வி.பி.ஆசைத்தம்பி (திமுக)

1962 கே.ஏ.மதியழகன் (திமுக)

1967 கே.ஏ.மதியழகன் (திமுக)

1971 கே.ஏ.மதியழகன் (திமுக)

1977 எஸ்.ஜே.சாதிக்பாட்சா (திமுக)

1980 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1984 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1989 மு.க.ஸ்டாலின் (திமுக)

1991 கே.ஏ.கிருஷ்ணசாமி (அதிமுக)

1996 மு.க.ஸ்டாலின் (திமுக)

2001 மு.க.ஸ்டாலின் (திமுக)

2006 மு.க.ஸ்டாலின் (திமுக)

2011 பா.வளா்மதி (அதிமுக)

2016 கு.க.செல்வம் (திமுக)

2021 எழில் நாகநாதன் (திமுக)

கடந்த 2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள்-1,35,940

எழில் நாகநாதன் (திமுக)-71,867

நடிகை குஷ்பு (பாஜக)-39,405

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

ஐ.வளா்மதி, மாவட்ட வருவாய் அலுவலா் - 8925960720, 044-28450574.