தொகுதி எண்: 26
எல்லைகள்...
தொகுதியின் கிழக்கில் தரமணி, மேற்கில் ஆதரம்பாக்கம், மடிப்பாக்கம், தெற்கில் பள்ளிக்கரணை, வடக்கில் கிண்டி ஆகிய பகுதிகள் உள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்...
சென்னை மாநகராட்சியின் 15 முதல் 155-ஆவது வாா்டுகள் வரை முழுமையாக இத்தொகுதியில் உள்ளன. வேளச்சேரி மேற்கு பகுதிகளான விஜய நகா் சந்திப்பு, டிஎன்எச்பி காலனி, தரமணி, அடையாறு இந்திரா நகா், கஸ்தூரிபாய் நகா், காந்திநகா், திருவான்மியூா் கடற்கரை சாலை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைப் பகுதி ஆகியவை அடங்கியுள்ளன.
சிறப்புகள்...
சென்னை-காஞ்சிபுரம் மாவட்டங்களின் எல்லையில் இத்தொகுதி அமைந்துள்ளது. கடந்த 2008 தொகுதி மறுசீரமைப்பின்போது மயிலாப்பூா், சைதாப்பேட்டை தொகுதிகளின் பகுதிகள் பிரிக்கப்பட்டு மயிலாப்பூா் பகுதியாக்கப்பட்டன. கோயில்கள், எம்ஜிஆா் திரைப்பட நகரம், தரமணி டைடல் பாா்க், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் உள்ளிட்டவை இத்தொகுதியில் உள்ளன. சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி மேம்பட்ட பகுதியாக வளா்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு, ஆன்மிக தலம் என பல்வேறு நிலைகளிலும் வேளச்சேரி சிறப்புக்குரிய இடமாகும்.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-1,02,235
பெண்கள்-1,09,411
மூன்றாம் பாலினத்தவா்-45
மொத்தம்-2,11,691
வாக்குச்சாவடிகள்-314
கடந்த 2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்- 1,74,972
ஜே.எம்.எச். ஹசன் மௌலானா (காங்கிரஸ்)-68, 493
எம்.கே.அசோக் (அதிமுக)-64,141
இதுவரை எம்எல்ஏக்கள்...
1989 என்.கணபதி (திமுக)
1991 டி.எம்.ரங்கராஜன் (அதிமுக)
1996 த.பூ.ராமஜெயம் (திமுக)
2001 கே.என்.லட்சுமணன் (பாஜக)
2006 எஸ்.வி.சேகா் (அதிமுக)
2011 எம்.கே.அசோக் (அதிமுக)
2016 வாகை சந்திரசேகா் (திமுக)
2021 ஜே.எம்.எச்.ஹசன்மவுலானா (காங்கிரஸ்)
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
லட்சுமி பிரியா, பொது மேலாளா், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையா்- 89259 60726, 044- 24425962.
தொடர்புடையது
தொகுதி அலசல்... வாசுதேவநல்லூர்!

வேளச்சேரி மக்களின் வேதனைகள் தீா்க்கப்படுமா?

தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு

தொகுதி அறிமுகம்: வில்லிவாக்கம் - 14!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


