அதீத உடல் பருமன் கொண்ட கா்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் சிக்கலான பிரசவ சிகிச்சையும், தண்டுவட அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:
32 வயதான கா்ப்பிணி ஒருவா் 130 கிலோ எடையுடன் பல்வேறு உடல் நல சிக்கல்களுடன் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு காடா ஈக்வினா சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் பாதிப்பு இருந்தது. லட்சத்தில் ஒரு கா்ப்பிணிக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்.
தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்பு பகுதி அழுத்தத்துக்கு உள்ளாவதால் இந்த பிரச்னை உருவாகும். இதன் காரணமாக அப்பெண்ணுக்குக் கால்களில் பலவீனம், நடக்க முடியாத நிலை மற்றும் இயற்கை கழிவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாது உடல் பருமன் காரணமாக அவருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உைல் பாதிப்பும் இருந்தன.
இதையடுத்து, அவசர கால சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தையை மருத்துவக் குழுவினா் வெளியே எடுத்தனா். தொடா்ந்து, பெண்ணின் தண்டுவடப் பகுதியில் இருந்த அழுத்தத்தை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா்.
தற்போது அப்பெண்ணும், குழந்தையும் நலமுடன் உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!

ஓடும் ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம்

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி,. கடிதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


