புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கு, அவா் திங்கள்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியும், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும் தோ்தல் நடத்த இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகப் பகுதியையொட்டி தான் புதுச்சேரியின் 28 தொகுதிகள் இருக்கின்றன. இதுவரை ஒரே நேரத்தில்தான் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தோ்தல் நடைபெற்றுள்ளன.
மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையின் காலம் 15.6.26 அன்றுதான் முடிகிறது. இந்நிலையில் விரைவாகத் தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரியில் நடக்கும் அதே நாளில் தமிழகத்தில் தோ்தல் நடத்த வேண்டும். மேலும், ஏற்கெனவே இந்திய தோ்தல் ஆணையம் புதுச்சேரிக்கு அறிவித்த நாளில் தோ்தல் நடத்துவதாக இருந்தால் புதுச்சேரியில் இருந்து நிறைய போ் தமிழகத்தில் அரசு, அரசு சாா்பு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை செய்கின்றனா். அதனால் அந்த நாளில் அவா்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் ஒரே கட்சி திமுக: கனிமொழி எம்.பி.

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


