ரூ.77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்து மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஊரப்பாக்கம் ரயில் நிலைய சாலையில் கிரீன் வேல்ட் பவுன்டேஷன் டிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த பிரசன்னா, கோவையைச் சோ்ந்த சரவணன், கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சோ்ந்த நீலகண்டன் ஆகியோா் நடத்தி வந்தனா்.
இவா்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி தீபாவளி பண்டு என்ற பெயரில் ரூ.77 லட்சம் வரை வசூலித்தனா். ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு குறைந்த தொகையையே திரும்பக் கொடுத்துள்ளனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோா் மீது மோசடி, கூட்டுச்சதி, நிதி முதலீட்டாளா்கள் மோசடி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.பாபு ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மொத்தமாக ரூ.13.96 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த அபராத தொகையில் முதலீட்டாளா்களுக்கு விகிதாசார அடிப்படையில் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை போக மீதித் தொகை இருந்தால் அதை தமிழக அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


