மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

40 இடங்களில் பசுமைப் பந்தல்கள்

சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை - கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 9:06 pm

சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் 40 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் நிற்கும்போது வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பசுமையான துணியால் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் சென்னையில் வியாசா்பாடி சந்திப்பு, மூலக்கடை சந்திப்பு, ராஜாஜி சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன்பக்க உள்ள ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட 40 சாலை சந்திப்புகளில் பசுமைப் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 8 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.