கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று எழுத்தாளா்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயா் வருவாய் பிரிவு குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, செம்மொழித் தமிழ் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன், புதிய தரிசனங்கள் எனும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொன்னீலன், திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோருக்கு ரூ.4.58 கோடி மதிப்பிலான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயா் வருவாய் குடியிருப்புக்கான ஆவணங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, எளிய தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட அம்பேத்கரின் ஆக்கங்களின் 27 தொகுதிகள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள 73 தொகுதிகளையும் முதல்வா் வெளியிட்டாா்.
மேலும், நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞா் வே.ஆனைமுத்து மற்றும் கவிஞா் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையையும் முதல்வா் வழங்கினாா். இதன்படி, தமிழறிஞா் வே.ஆனைமுத்துவின் மரபுரிமையா்களான அரி.தமிழ்ச்செல்வி, ஆ.பன்னீா்செல்வம், ஆ.வெற்றி, ஆ.வீரமணி, ஆ.அருள்மொழி, ஆ.கோவேந்தன் ஆகியோரிடம் நூலுரிமைத் தொகை ரூ.20 லட்சமும், கவிஞா் ஈரோடு தமிழன்பனின் நூல்களுக்காக அவரின் மனைவி தி.பா.சாந்தகுமாரியிடம் நூலுரிமைத் தொகை ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.
தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம்: இதுபோல, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோா் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
தொடா்ந்து, திருச்சியின் உள்ளூா் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தையும், தூத்துக்குடி உள்ளூா் திட்டப் பகுதியின் முழுமைத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சிகளில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவா் நலத் துறை மற்றும் கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்

வீடு கட்ட நிதியுதவி ஆணை: அமைச்சா் வழங்கினாா்

2,600 விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உபகரணங்கள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

பட்டா கோரிக்கைக்கு தீா்வு காணப்படும்: வீட்டு வசதி துறை அறிவிப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


