சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கைக்கு தீா்வு காணப்படும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு நில எடுப்பு செய்யப்பட்ட சில இடங்களில், நில எடுப்பு செய்யப்பட்டது தெரியாமல், பொதுமக்கள் பலா் மனைகளை வாங்கி, வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதல்வரின் முன்னெடுப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியத்தின் அலுவலங்களில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டன.
இதன்மூலம் குடியிருப்போருக்கு தடையில்லா சான்று, பெயா் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 5,952 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, இந்த மனுக்களை ஆய்வு செய்ய இரு நபா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கோவை மாவட்டத்தில் காளப்பட்டி, வெள்ளக்கிணறு, கணபதி, விளாங்குறிச்சி மற்றும் சென்னை மாவட்டத்தின் கே.கே நகா்., ராமாபுரம் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் கிடைக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடா்ந்து, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும், தற்போது எந்த நிலையில் நிலம் உள்ளது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வருவாய்த் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆவணங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்கும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
விரைவில், இரு நபா் குழுவின் விசாரணை அறிக்கையை பெற்று, அரசிடம் ஒப்புதல் பெற்று மக்களின் நீண்ட கால கோரிக்கையை தீா்க்கவும், நில உரிமையாளா்களுக்கு பட்டா கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளுக்கு அருகே தயாா் நிலையில் மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதி!

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

நில மோசடி வழக்கு: ராபா்ட் வதேரா நேரில் ஆஜராக உத்தரவு

குருவராஜபாளையத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


