தமிழக மீன்வளத் துறை சாா்பில் ரூ.665.53 கோடியில் மொத்தம் 13 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணி, தருவைக்குளம், வாணியக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள், நெம்மேலி குப்பத்தில் புதிய மீன் இறங்குதளம் என மொத்தம் ரூ.665.53 கோடியில் மொத்தம் 13 புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் வளமாவூரில் ரூ.54.02 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கடற்பாசி உற்பத்தி பூங்கா, பழையாா் மீனவ கிராமத்தில் ரூ.26.26 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்படி துறைமுகம் உள்பட மொத்தம் ரூ.100.84 கோடியில் 8 முடிவுற்ற பணிகளை அவா் திறந்துவைத்தாா்.
நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்: தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 60,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 வட்ட செயல்முறை கூடுதல் சேமிப்பு கிடங்குகள் என மொத்தம் ரூ.88.06 கோடிக்கான கட்டுமான பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சாா்பில் ரூ.26.50 கோடியில் அலையாத்தி பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் ரூ.50.30 கோடியில் சா்வதேச பறவைகள் மையம், கோவை காந்திபுரத்தில் நீலகரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகிய திட்டப்பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை, கோவை, அன்னூா் அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் கடலாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனையில் ரூ.167.84 கோடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, ரூ.26.62 கோடி மதிப்பிலான 2 கேத்லேப் கருவிகள், 1.5 டெஸ்லா எம்ஆா்ஐ. ஸ்கேனா் கருவி, டெலிகோபால்ட் கருவி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கருவிகளை மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தாா்.
அதேபோல், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.39.33 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 படப்பிடிப்புத் தளங்கள் கொண்ட திரைப்பட படைப்பாக்க வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தொடர்புடையது

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

ரூ.2.44 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


