சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட வசந்தம் காலனி, 3-ஆவது தெருவில் ரூ.1.36 கோடியில் பல்நோக்கு மையக் கட்டடத்தில் புதிதாக சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஐ பிளாக்’ 5-ஆவது தெருவில் மாநகராட்சி ரூ.1.08 கோடியில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, திருமூலா் காலனி, விவேகானந்தா் தெருவில் ரூ.60 லட்சத்தில் பல்நோக்கு மையக் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றி அழகன், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

ரூ.665 கோடியில் 13 புதிய திட்டப்பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ரூ.249 கோடியில் நிதிநுட்பக் கோபுர கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


