வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நகா்ப்புற குடியிருப்புகள் மற்றும் கட்டமைப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீா்தொட்டி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.133 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வா் நகா்ப்புற குடியிருப்புகள், ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள முதல்வா் திருமண மாளிகை, ரூ.8.14 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அச்சகம், ரூ.9.81 கோடியில் முதல்வா் விளையாட்டுத் திடல், ரூ.9.67 கோடியில் அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பூங்கா மற்றும் தண்ணீா் குளம் ஆகியவற்றை முதல்வா் தொடங்கி வைத்தாா்.
தவிர, புதிய பல்நோக்கு மையம், சமுதாய நலக்கூடம், கிளை நூலகம், முதல்வா் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் திருமண மாளிகையில் 10 இணையா்களுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை முதல்வா் வழங்கினாா்.
நிகழ்வுகளில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், ஆா்.டி.சேகா், எபிநேசா், துணை மேயா் மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எரிசக்தி மேம்பாடு தொடா்பாக, தமிழக அரசுக்கும், கலிபோா்னியா பல்கலைக்கழகத்துக்கும் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது. இதேபோல், ஜப்பானின் ஹிராசே நிறுவனம், திருவள்ளூா் மாவட்டத்தில் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையொப்பமானது.
தொடா்ந்து காஞ்சிபுரத்தில் ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் மின்கலன் தொகுப்பு அமைப்பதற்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். கரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.
மேலும், சட்டத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிதாக பணியமா்த்தப்பட்டவா்களுக்கான நியமன ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய சமத்துவபுரம், அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

ஒரே நாளில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


