தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம், அடுக்குமாடி குடியிருப்புகள், சாா்பதிவாளா் அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி முறையில் அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் கொண்டு வந்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.78 .41 கோடியில் ராமநாதபுரம்- வல்லிமாடன் வலசையில் சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாமக்கல், வையப்பமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைச்சாலையும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலகக் கட்டடங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, பொது சுகாதார கட்டடங்களும், சமுதாயக்கூடங்களும், பள்ளிக் கட்டடங்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சூலூா், தூத்துக்குடி மாவட்டம் ஏரல், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, திருப்பத்தூா், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் ரூ.14.92 கோடியில் பதிவுத் துறைக்காக கட்டப்பட்டுள்ள 7 புதிய சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
இதைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்ட கோவை மாவட்டம் சா்க்காா்சாமக்குளம் சாா்பதிவாளா் அலுவலகம், தருமபுரி பதிவு மாவட்டம், பாப்பாரப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகங்களையும் முதல்வா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் ரூ.62.68 கோடியில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் 210 திட்டப் பகுதிகளில் 74,522 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள், துறைச் செயலா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

ராமநாதபுரம் அருகே சமத்துவபுரம் திறப்பு

ஒரே நாளில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


