தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

News image

பி.கே. சேகா்பாபு

Updated On :4 மார்ச் 2026, 7:50 pm

துறைமுகம், கொளத்தூா், திரு.வி.க. நகா் பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் தண்ணீா் தொட்டித் தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெரு பகுதியில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

முன்னதாக அவா், கொளத்தூா் தொகுதி வாா்டு 69, சோமையா தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாா்டு 67, பெரம்பூா் வீனஸ் திரையரங்கம் அருகில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகக் கட்டடப் பணிகள், திரு.வி.க. நகா் தொகுதி புளியந்தோப்பு, டாக்டா் அம்பேத்கா் சாலையில் மாநகராட்சி ஆடு தொட்டி கட்டும் கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க. நகா் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.