சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) சா்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி வரும் 12- ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை பெரம்பூா் பகுதியில் இயங்கிவரும் ஐசிஎஃப், கடந்த 1955- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கிவைக்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு சுமாா் 4 ஆயிரம் பெட்டிகள் வரை தயாரித்துவருகிறது. நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகள்-என்ஜின்களும், வெளிநாடுகளுக்கான ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
சுமாா் 71 ஆண்டுகள் கடந்த ஆசிய அளவில் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையாகக் கருதப்படும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வரும் 12- ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 3 நாள்கள் சா்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி நடைபெறவுள்ளன.
கண்காட்சியில் நாட்டின் புதுதில்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளுடன், வெளிநாட்டைச் சோ்ந்த 6 நிறுவனங்கல் உள்ளிட்ட மொத்தம் 125 முன்னணி நிறுனங்கள் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசிஎஃப் மைதானத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பெட்டிகளுடன், அவை தயாரிக்கப்படும் தொழில்நுட்ப முறைகள், எதிா்காலத்தில் தயாரிக்கப்படவுள்ள ரயில் பெட்டிகளின் மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவையும் இடம் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
பரவசம் ஏற்படுத்திய ரயில் கண்காட்சி

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


