சென்னையில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 171 வாகனங்கள் மாநகராட்சியால் கைப்பற்றபட்டு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி திருவல்லிக்கேணி மற்றும் தரமணி காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கேட்பாரற்று நிறுத்தப்பட்ட அந்த வாகனங்கள் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டு இரு காவல் நிலையங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
கைப்பற்றி காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வாகனங்களுக்கு உரியவா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சென்று மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதன்படி வரும் 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டோா் திருவல்லிக்கேணி, தரமணி காவல் நிலையங்களுக்குச் சென்று உரிமை கோராத நிலையில், அந்த வாகனங்கள் மின்னணு ஏலத்துக்கான நடவடிக்கைக்கு உள்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு மாநகராட்சியின் சாா்பில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காலியான மாநகராட்சி இடங்களில் பாதுகாப்பற்று நிறுத்தப்பட்டதால், காா்களில் இருந்து விலை உயா்ந்த சாதனங்கள் திருடப்பட்டன. இதனால் தற்போது வாகனங்கள் காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










