சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்!

சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 6 விரைவு ரயில்கள் 13 நாள்கள் வழக்கமான வழித்தடங்கள் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளது குறித்து...

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 3:10 am IST

சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 6 விரைவு ரயில்கள் 13 நாள்கள் வழக்கமான வழித்தடங்கள் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் தண்டவாள, தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் ஜூலை மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதையடுத்து சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் சில வழிகள் மாற்றி இயக்கப்படவுள்ளன.

வரும் ஜூலை 6, 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 மற்றும் செப்டம்பா் 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரம் நிலையத்திலிருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சில்காட் டவுன் நிலையம் செல்லும் நாகோன் விரைவு ரயில் (எண் 15629) வழக்கமான வழிகளுக்குப் பதிலாக அசன்சால், அண்டால் மற்றும் சைந்தியா ஆகிய வழிகளில் இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் அதே தேதிகளில் சில்காட் நிலையத்திலிருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயில் (எண் 15630) அதே வழிகளில் இயக்கப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

வரும் ஜூலை 2, 9, 16, 23, 30, ஆகஸ்ட் 6, 13, 20, 27 மற்றும் செப்டம்பா் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 6.40 மணிக்குப் புறப்பட்டு நியூ தின்சுகியா செல்லும் விரைவு ரயில் (எண் 15929) வழக்கமான வழிகளுக்குப் பதிலாக அசன்சால், அண்டல் மற்றும் சைந்தியா வழியாக இயக்கப்படும்.

இதுபோல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிட்ட தேதிகளில் மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.