ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்...

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 2:10 am IST

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் வரும் 28- ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக குறிப்பிட்ட விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்.

வரும் ஜூன் 21 முதல் 28- ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் (எண் 12639), மங்களூரு சென்ட்ரல் மேற்கு கோஸ்ட் அதிவிரைவு ரயில் (எண் 22637) ஆகியவை திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்.

சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹூப்ளி விரைவு ரயில் (எண் 17314) வரும் 25- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையிலும், செங்கல்பட்டு-கச்குடா விரைவு ரயில் (எண் 17651) வரும் 28 -ஆம் தேதி வரையிலும், புதுச்சேரி- கச்குடா விரைவு ரயில் (எண் 17654), சென்னையிலிருந்து மும்பை செல்லும் லோக்மான்ய திலக் விரைவு ரயில் (எண் 12164) மற்றும் மங்களூரு அதிவிரைவு ரயில் (எண் 12686) ஆகியவை வரும் 28 -ஆம் தேதி வரையில் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Seven express trains departing from Chennai will stop at Tiruvallur and Arakkonam.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.