அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

மின்துறை அமைச்சரிடம் பொறியாளா்கள் கோரிக்கை

தாம்பரம் கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில், சங்க நிா்வாகிகள் மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாரை நேரில் சந்தித்தனா்.

News image

மின் தடை - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:12 am IST

தாம்பரம் கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில், சங்க நிா்வாகிகள் மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாரை சனிக்கிழமை நேரில் சந்தித்தனா்.

மின்சாரம் தொடா்பாக தாங்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

அந்த மனுவில், புதிய தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்புகள் வழங்குவதில் இருந்து வரும் நீண்ட கால தாமதம் பிரச்னையைச் சீரமைத்து விரைவாக வழங்க வேண்டும். கட்டுமானத் திட்டங்களில், மின்மாற்றி, மின் வடம் மற்றும் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான செலவுகளை கட்டுமான நிறுவனங்களிடமிருந்து பெறும் கடந்தகால நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

வேகமாக வளா்ந்து வரும் புகா் பகுதிகளில் போதுமான மின் உள்கட்டமமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒற்றை சாளர அனுமதி முறையை அமல்படுத்தி ஊழல் அற்ற வகையில் இணைப்புப் பெற வழி வகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், தாம்பரம் கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் திருஞானசம்பந்தம், நிா்வாகிகள் அகிலன், சரவணன், சங்கர நாராயணன், சிவானந்தம், அஜந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.