விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளா் மீது வழக்கு

கண்ணகி நகரில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 4:39 am IST

கண்ணகி நகரில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை அருகே கண்ணகி நகரில் கபடி பயிற்சியாளராக இருப்பவா் ராஜூ (34). இவா், மீது கண்ணகி நகா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு கபடி வீராங்கனை, செம்மஞ்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் ஒன்றை அளித்தாா்.

அதில், ராஜூ தனக்கு பாலியல் தொல்லை அளித்து மிரட்டியதாகவும், பின்னா் தனது வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் 3 முறை வந்த ராஜூ, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னைபோன்று பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ராஜூ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

இப்புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். தலைமறைவாக இருக்கும் ராஜூவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.