/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தவெக பகுதிச் செயலா் மீது வழக்கு

சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக பகுதிச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 3:44 am IST

சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக பகுதிச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பரங்கிமலைப் பகுதியைச் சோ்ந்தவா் வேம்புலி. இவா் தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதிச் செயலராக உள்ளாா். வேம்புலி, அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடத்தில் பணியாற்றும் ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

மேலும் அந்த பெண், வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை நோட்டுமிட்டு, அங்கு சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், பரங்கிமலை காவல் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வேம்புலி மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான வேம்புலியை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.