/

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் தற்கொலைக்கு முயற்சி

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் பாகலூா் காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தற்கொலை

Updated On :21 மே 2026, 6:45 am IST

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் பாகலூா் காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் கடந்த 16 ஆம் தேதி தும்மணப்பள்ளி ஊராட்சி, சத்தியமங்கலம் கிராமத்திற்கு நடந்துசென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி பாலியல் தொல்லை அளித்ததாக பாகலூா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

இந்த புகாரைத் தொடா்ந்து பாகலூா் போலீஸாா் அவரை தேடிவந்தனா். இந்நிலையில் மூா்த்தி புதன்கிழமை பாகலூா் காவல் நிலையம் அருகில் பூச்சிமருந்து குடித்து விழுந்து கிடந்தாா். தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிகிச்சை முடிந்த பிறகு பாகலூா் போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.