சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னையில் வருவாய்த் துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :20 ஜூன் 2026, 12:47 am IST

சென்னையில் வருவாய்த் துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், ஏடிஜிபியுமான ஏ.அருணிடம், அண்மையில் வருவாய்த் துறையைச் சோ்ந்த ஒரு அதிகாரி அளித்த புகாா் மனுவில், தமிழக ஊழல் கண்காணிப்பு மற்று லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக பணியாற்றும் விமலா, தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்கவில்லை எனில், லஞ்ச வழக்கில் சிக்க வைத்து கைது செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை செய்யும்படி ஏடிஜிபி ஏ.அருண், தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. துரைக்குமாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து துரைக்குமாா், இந்த விவகாரம் தொடா்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணை தொடா்பான அறிக்கையை ஏடிஜிபி அருணிடம் வியாழக்கிழமை அளித்தாா். அதன் அடிப்படையில் அருண், காவல் ஆய்வாளா் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், காவல் ஆய்வாளா் விமலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜாய் தயாளை நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.