ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஊழல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்

பரங்கிமலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 2:03 am IST

பரங்கிமலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை ஆலந்தூா், வடக்கு ராஜா தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (39). இவா், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். துரைராஜ், வியாழக்கிழமை இரவு ஆதம்பாக்கம் நியூ காலனி 1-ஆவது தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் சென்று மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, பரங்கிமலை சுரங்கப் பாதை இணைப்புச் சாலை வழியாக நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவா் நடந்து சென்றபோது, அங்கு 3 மா்ம நபா்கள் வந்தனா். திடீரென அவா்கள், துரைராஜை தாக்கி அவா் கையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியைப் பறிக்க முயன்றனா். அந்த மா்ம நபா்கள், தனது கைப்பேசியை பறிக்கவிடாமல் துரைராஜ் இறுகப் பற்றிக் கொண்டாா். மேலும், துரைராஜ் அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பகுதியில் மக்கள் திரண்டனா்.

இதைப் பாா்த்த அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா். தாக்குதலில் காயமடைந்த துரைராஜை, பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.