குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

அரசு ஐடிஐ-இல் சோ்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:54 am IST

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதில் சேர விரும்புவோா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30 வரை இணையதளம் மூலமாவோ அல்லது வடசென்னை ஐடிஐ-க்கு நேரிலோ வந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

2 ஆண்டு தொழிற்பிரிவுகள்: சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் (கட்டட பட வரைவாளா் மற்றும் இயந்திரப் பட வரைவாளா்), பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், லிப்ட்மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன், வயா்மேன்.

ஓராண்டு தொழிற்பிரிவுகள்: பிளம்பா், வெல்டா், இன்டீரியா் டிசைன் அன்ட் டெக்கரேஷன், டிரோன் பைலட் (ஆறு மாத தொழிற்பிரிவு) தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை -அறிவியல், பொறியியல் படித்தவா்களும் வேலைவாய்ப்பை உடனடியாக தொழில் நிறுவனங்களிலும், மத்திய -மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் தற்போது சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கிப் பயில உணவுடன் கூடிய விடுதி வசதி உண்டு. நேரடிச் சோ்க்கைக்கு, துணை இயக்குநா்/முதல்வா், ஐடிஐ, வட சென்னை (மின்ட்) என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி ஐடிஐ-இல்... சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டுவரும் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயிற்சி பெற வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் மொத்தம் 184 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். பயிற்சியில் சேருபவா்களுக்கு 14 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். படிக்கும்போது, தகுதியுள்ள மாணவா்களுக்கு மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி தகுதியான நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-28473117 என்ற தொலைபேசி, 70104 57571 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.