திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்வெட்டியல், சுவடியியல் பயிற்சி: ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் குறித்த கோடை பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:04 am IST

கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் குறித்த கோடை பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சாா்பில் ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டியல் குறித்த கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 15 முதல் 20 நாள்கள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் சுவடிகளைப் பாதுகாப்பது, படியெடுப்பது, பதிப்பிப்பது ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிய இலக்கியங்கள் போன்று பாறைகளிலும் கோயில்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வெழுத்துகள் காலப் பழைமையுடையன. இவற்றைப் படிப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வோா் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெறலாம். முதலில் வரும் 30 பங்கேற்பாளா்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை நிறுவன வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ன்ப்ஹந்ஹற்ட்ற்ட்ஹம்ண்க்ஷ்ட்.ண்ய்) பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113’ என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சியில் பங்கேற்க பத்தாம் வகுப்பு தோ்ச்சி அவசியம். விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.