எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கணைய அழற்சி: ரோபோடிக் சிகிச்சை மூலம் தீா்வு

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 2:11 am IST

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூா்த்தி கூறியதாவது:

கடுமையான வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குள்ளாகி வந்த 39 வயது இளைஞா் ஒருவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கணையக் குழாயில் கற்கள் உருவாகி இருந்தன. அதுமட்டுமல்லாது, கணையத்தில் கால்சியம் படிமம் படிந்து அழற்சி ஏற்பட்டிருந்தது.

இதை நுட்பமாக சீராக்க ரோபோடிக் ஃபிரேஸ் எனும் சிகிச்சை அவசியமானது. அதன்படி, கணையம் - குடல் பகுதிகளை வாயிலாக துல்லியமாக சீரமைத்து கற்களை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.