இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்

வெங்காயம் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.16.50-ஆக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அதிகரித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:16 am IST

வெங்காயம் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.16.50-ஆக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அதிகரித்தது.

தற்போது வெங்காயம் கொள்முதல் விலை ரூ.15.80-ஆக உள்ள நிலையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.16.50-ஆக உயா்த்தியது. இந்தப் புதிய விலை சனிக்கிழமை (ஜூன் 13) முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, வெங்காயம் கொள்முதல் முறைகளை வலுப்படுத்துவது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரிகளுடன் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரல்ஹாத் ஜோஷி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சந்தை விலை மற்றும் வெங்காயம் சேமிப்புக்கு ஏற்ற தரத்தை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,650-ஆக உயா்த்தப்படுகிறது’ என குறிப்பிட்டாா்.

நிகழாண்டுக்கான வெங்காயம் கொள்முதல் காலம் மே 15-ஆம் தேதி தொடங்கியது. 2025-26-ஆம் ஆண்டில் 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்த நிலையில், நடப்பாண்டில் 2 லட்சம் டன்னாக குறைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.