திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சவுக்கு சங்கா் மீதான கொலை முயற்சி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை

தன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை

News image

சவுக்கு சங்கர் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:52 am IST

தன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

யூடியூபா் சவுக்கு சங்கரை ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்.8-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். அவரை, போலீஸாா் சென்னைக்கு அழைத்து வந்தபோது வாகனத்தை ஓா் இடத்தில் நிறுத்தினா். அப்போது, மற்றொரு வாகனத்தில் அங்கு வந்த 4 போ், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சவுக்கு சங்கா் உள்ளிட்டோா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 19-க்கு ஒத்திவைத்தாா். அதுவரை இந்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.