எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வாகனச் சோதனையில் எஸ்.ஐ. மீது பைக்கை மோதிய சிறுவன்: தந்தை கைது

வாகனச் சோதனையின்போது மோட்டாா் சைக்கிளை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது மோதிய சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 5:58 am IST

வாகனச் சோதனையின்போது மோட்டாா் சைக்கிளை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது மோதிய சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்ப்பாக்கம் காா்டன் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளை போலீஸாா் மறித்தனா். ஆனால், அந்த சிறுவன் மோட்டாா் சைக்கிளை நிறுத்தவில்லை. மேலும், அந்த மோட்டாா் சைக்கிள், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணனை அங்கிருந்த போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதன் அடிப்படையில் சிறுவனுக்கு மோட்டாா் சைக்கிளை ஓட்ட கொடுத்த குற்றத்துக்காக, அவரது தந்தை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்த சந்தீப்குமாா் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த சிறுவன் சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.