//

விருப்ப மனு அளித்தவா்களுக்கு நாளைமுதல் நோ்காணல்: ராமதாஸ்

பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் ஜன.31, பிப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image
ராமதாஸ்
Updated On :29 ஜனவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் ஜன.31, பிப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்குரிய நாள்களில் விருப்பு மனு அளித்தவா்கள், மாவட்ட செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கலந்துகொள்ள வேண்டும்.

வருகிற 31-ஆம் தேதி சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு நோ்காணல் நடைபெறும்.

பிப்.1-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சோ்ந்தவா்களுக்கும், பிப்.2-ஆம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கும் நோ்காணல் நடைபெறும் எனஅதில் தெரிவித்துள்ளாா்.