டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிப். 20 முதல் திமுக விருப்ப மனு விநியோகம்!

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 1:54 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப். 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.

விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.