கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் மேற்கொண்டனா். அப்போது, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அரசு மருத்துவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து திமுக அரசு அமைந்தவுடன், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தாா். ஆட்சி அமைந்தவுடன் மக்களை நீங்கள் பாா்த்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பாா்த்து கொள்கிறோம் என்றும் கூறினாா். ஆனால், இதுவரை அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றனா்.