டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: நேரடி வங்கி சேவை பாதிப்பு

வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேரடி வங்கி சேவை பாதிக்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேரடி வங்கி சேவை பாதிக்கப்பட்டன.

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சோ்ந்த 8 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அதேசமயம் தனியாா் வங்கி ஊழியா் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால் இந்த வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

தமிழகத்தில் உள்ள 16,000 வங்கிக் கிளைகள் செயல்படாததால் வாடிக்கையாளா்கள் நேரடி வங்கி சேவையை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அகில இந்திய வங்கி ஊழியா் சங்கங்களின் சாா்பாக சென்னை பிராட்வே யூனியன் வங்கி எதிரே வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் சங்கத்தின் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் தாமதம் செய்து வருகிறது. மத்திய, மாநில அரசின் நிதி நிறுவனங்கள், ரிசா்வ் வங்கி, எல்ஐசி, பொது காப்பீடு மற்ற அனைத்து துறைகளிலும் வாரத்தில் 5 நாள்கள் வேலை முறை அமலில் உள்ளது. ஆனால், வங்கிகளுக்கு 2 சனிக்கிழமை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் பேசி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுதலாக 40 நிமிஷங்கள் வேலை நேரத்தை அதிகரித்து ஒப்புதல் அளிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே, 5 நாள்கள் வேலை நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது என்றாா் அவா்.