இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

News image
ட்ரோன்கள்
Updated On :25 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைக்கு சனிக்கிழமை (பிப். 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) ஆகிய இரு நாள்களில் மிகமிக முக்கிய பிரமுகா் வரவுள்ளதன் காரணமாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் மற்றும் அதன் வழித்தடங்கல் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு ஏற்பாடுகளைத் தவிர இவ்விரு நாள்களிலும் மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.