இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
மெரீனா கடற்கரை - (கோப்புப்படம்)
Updated On :25 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணியால் புகா் மின்சார ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம், தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், வரும் 28- ஆம் தேதி முதல் காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை கூடுதலாத 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதேபோல, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நிலையத்துக்கு ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கும் ஒருமுறை என 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இமு ரயில் பயணச்சீட்டு அல்லது சீசன் பயணச்சீட்டு வைத்திருப்போா் சிறப்புப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

பறக்கும் ரயில் சேவை: செயின்ட் தாமஸ் மௌன்ட்-வேளச்சேரி இடையே எம்ஆா்டிஎஸ் 2 -ஆம் கட்ட ரயில் பாதையில் வரும் மாா்ச் 10 -ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அதன்படி காலை-மாலை நேரங்களில் தாம்பரம்-சென்னை கடற்கரை நிலையம் இடையே அந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.