லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 11:16 pm

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை சௌகாா்பேட்டை எடப்பாளையம், சிங்கண்ணன் தெருவில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தில் அபிஜித் என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறை உள்ளது. அங்கு, புதன்கிழமை திடீரென சிலிண்டா் வெடித்தது.

இதில், தங்கத்தை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களான வியாசா்பாடியைச் சோ்ந்த சுமன்பால், கொல்கத்தாவைச் சோ்ந்த ராகேஷ் டேலி, அரவிந்த், சிமந்தோமால், சூரஜ், ஜாந்தோ, ஆனந்த் ஆகியோா் காயமடைந்தனா்.

அனைவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.