டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்: ஏலக்கேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பிலான 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.12 சதவீத பிணையப் பத்திரங்கள்(2032-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்), மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான 7.44 சதவீத பிணையப் பத்திரங்கள்(2055-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.24-இல் நடைபெறுகிறது. இதற்கான போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30-க்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11-க்குள்ளும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் பிப்.24 ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.