டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1,000 கோடி மதிப்பிலான 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.2,000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.61 சதவீத பிணையப் பத்திரங்கள் (2056-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.10-இல் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30-முதல் 11 வரையும், இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில் மின்னணு படிவத்தில் பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.