டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 16 இல் மருத்துவ முகாம்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வரும் பிப். 16 இல் தருமபுரியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தருமபுரி வட்டார வள மையம் சாா்பில் வரும் பிப்.16 திங்கள்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தருமபுரி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மாணவா்களுக்கு தேசிய அடையாள அட்டை , தனித்துவ அடையாள அட்டை, ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகைக்கான பதிவு, அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவும் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி முகாமில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.