//

30 ஆண்டு கோரிக்கை! கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு!

கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.

News image
கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு.- படம்: DIPR
Updated On :12 பிப்ரவரி 2026, 8:55 am

தினமணி செய்திச் சேவை

சென்னை கொருக்குப்பேட்டையில் ரூ.96 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப். 12) திறந்துவைத்தார்.

கொருக்குப்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் ரூ.75 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலம் கொருக்குப்பேட்டையில் ரயில்வே 2 பி சந்திப்புக் கடவுப் பகுதியில் மக்கள் கோரிக்கையை ஏற்று ரூ. 96.04 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.

பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தையும், அருகில் உள்ள பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மணலி சாலையைப் பயன்படுத்துபவர்களும், தொண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், மணலி சாலை வழித்தடத்தில் செல்பவர்களும் பயன் அடைந்துள்ளனர்.

summary

Chief Minister M.K. Stalin inaugurated the railway flyover built at a cost of Rs. 96 crore in Korukkupettai, Chennai today (Feb. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.