மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கும் விடியோ ஒன்றை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த நிலையில், பிப். 4 அன்று மக்களவையில் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை.
பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது.
இதுதொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு வருகிறார்.
மக்களவையில் பிரதமரின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஆரப்பாட்டம் நடத்திய விடியோவைப் பகிர்ந்திருந்த அமைச்சர், இப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி. க்கள் நுழைந்து வாக்குவாதம் செய்வது போன்ற ஒரு விடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி.க்கள், அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் அங்கு இருக்கின்றனர்.
விடியோ பற்றி அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இது, 20 - 25 காங்கிரஸ் எம்.பி.க்கள், அவைத்தலைவரின் அறைக்குள் நுழைந்து, அவரை திட்டியதுடன் பிரதமரை மிரட்டியபோது ஒரு காங்கிரஸ் எம்.பி. சட்டவிரோதமாக எடுத்த விடியோ கிளிப்.
எங்கள் கட்சி விவாதம், உரையாடலில் நம்பிக்கை கொண்டுள்ளது. உடல் ரீதியாக எம்.பி.க்கள் அச்சுறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மக்களவைத் தலைவர் அறைக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 25 எம்.பி.க்கள் நுழைந்து, அவரிடம் முறையற்றவாறு நடந்து கொண்டனர். நானும் அங்குதான் இருந்தேன். பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். அவைத் தலைவர் மிகவும் மென்மையான மனிதர். இல்லையெனில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். எதிர்க்கட்சியினரால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வேதனையடைந்துள்ளார்" என்று கூறியிருந்தார்.
Summary
Congress MPs inside Lok sabha speaker Om Birla's room: Kiren Rijiju releases video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசிடம் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


