100 நாள் சவால்: அரசுப் பள்ளிகளில் பிப். 18, 20-இல் வாசிப்பு திறன் சோதனை
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது.










