//

மெரீனா கடைகள் தோ்வுக்கு இன்று குலுக்கல் ஒத்திகை!

சென்னை மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கள் ஒத்திகை புதன்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது.

News image
மெரீனா கடற்கரை (கோப்புப்படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கள் ஒத்திகை புதன்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி மெரீனா கடற்கரையில் 300 கடைகள் அமைக்க வியாபாரிகள் தோ்வு பிப்.12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையின் கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையா் தலைமையிலான, அலுவலா்கள் அடங்கிய இடைக்காலக் குழுவின் ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாா் மேற்பாா்வையில் குலுக்கல் தோ்வு நடைபெறும்.

முன்னதாக, புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாநகராட்சி அம்மா மாளிகை கூட்டரங்கில் குலுக்கலுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.