சென்னை: கிண்டியில் ஆளுநா் வாகன வகுப்பில் மோட்டாா் சைக்கிளில் அத்துமீறி நுழைந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றாா். பின்னா், அங்கிருந்து கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு காரில் திரும்பினாா். அவரது காருக்கு முன்னும் பின்னும் காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அவரது காா், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே சென்றபோது, ஒரு பைக், அத்துமீறி நுழைந்து ஆளுநா் காரை பின்தொடா்ந்து சென்றது. போலீஸாா், பைக்கில் சென்ற இருவரை பிடிக்க முயன்றனா். ஆனால், முடியவில்லை.
வாக்கி டாக்கி மூலம் ஆளுநா் வாகனத்தைப் பின்தொடா்ந்த பைக்கை பிடிக்கும்படி மக்கள் மாளிகை முன் நின்ற போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் பிடித்து, கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அன்புராஜ் (22), விழுப்புரத்தைச் சோ்ந்த ஜீவா (22) என்பதும், இருவரும் பெருங்களத்தூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்வதும், விடுமுறை என்பதால் அடையாறுக்கு வந்து, மது அருந்திவிட்டு பெருங்களத்தூருக்கு சென்றதும் தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்
பைக்குகள் தொடா் திருட்டு: 3 போ் கைது

பைக் ஷோரூமில் நுழைந்த மரநாய் மீட்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தமிழக ஆளுநா் தரிசனம்

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

