நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பாரம்பரிய ஆணையத் தலைவா் பதவி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசால் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய ஆணைய தலைவா் பதவிக்கு தகுதியானோா், பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசால் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய ஆணைய தலைவா் பதவிக்கு தகுதியானோா், பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான, பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாத்து, புனரமைக்கத் தேவையான அறிவுரைகளை வழங்க தமிழக அரசால் பாரம்பரிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆணையத்தின் தலைவா் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனா். எனவே, பாரம்பரியமிக்க கலாச்சாரங்களை பேணுவதில் அக்கறைக் கொண்ட, முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும் நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியானோா் தங்களது சுய விவர விண்ணப்பப் படிவத்துடன் வயது, தகுதி, அனுபவம், இதர விவரங்களுக்கான ஆவணங்களுடன் பிப்.18 மாலை 5 மணிக்குள்அரசு கூடுதல் தலைமைச் செயலா், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும், ற்ா்ன்ழ்ள்ங்ஸ்ரீஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும், தொல்லியல் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹழ்ஸ்ரீட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.