தொழிற்பள்ளி அங்கீகாரத்துக்கு பிப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வரும் பிப். 28 ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வரும் பிப். 28 ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள்/ தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் தபஎந/சஉஊப மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000/-மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2026. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் தொலைபேசி எண்: 044-22501006 (113) , உஙஅஐக ஐஈ : க்ங்ற்ண்ள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...