டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

திமுக இளைஞா் அணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெறவுள்ளது.

News image
உதயநிதி - கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

திமுக இளைஞா் அணி  தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருது நகரில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தங்களது கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக இளைஞா் தென் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  துணை முதல்வரும், திமுக இளைஞா் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் உள்ள கலைஞா் திடலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) நடைபெறவுள்ளது.